Claim: சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதல்ல. கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்டதாகும்.
“வெறும் 6 செமீ மழைக்கே நகரம் தாங்கலை… இதான் திராவிட மாடலா… 4000 கோடி செலவு பண்ணிங்கன்னு சொல்லும்போது நம்புனமே… ரோட்ல எப்படி போவாங்க மக்கள்… நீங்க சொல்ற மாதிரி 40 செமீ மழை பெய்ஞ்சா மக்கள் ஊரையே காலி பண்ணணும் போல… ஏன் இப்ப தண்ணி நிக்கனும்.. மழைநீர் வடிகால் எங்க .. துணை முதலமைச்சர்.. முதலமைச்சர் எங்க போனாங்க .. ஏன் ஒரு அமைச்சர் கூட இங்க போகலை… அடுத்த தேர்தல்லை இதை சொல்லி ஓட்டு கேப்பிங்களா” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோவில் ஒன் இந்தியாவின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் இவீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘6 செ.மீ. மழைக்கே ஆடிப்போன பெங்களூர்’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ ஒன் இந்தியா தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் கர்நாடகா போர்ட்ஃபோலியோ எனும் எக்ஸ் பக்கத்திலும் பெங்களூரில் மழை நீர் தேங்கியிருப்பதாக கூறி வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!
Conclusion
சென்னை நகரத்திற்குள் மழைநீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோ கர்நாடகாவின் பெங்களூரில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram Post from One India Tamil, Dated October 16, 2024
Instagram Post from Karnataka Portfolio, Dated October 15, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்