Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

banner_image

Claim: பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“IMK’s powerful protest and meeting, standing up against the relentless verbal abuse directed at Brahmins for decades, has been entirely blacked out by TN Dravidian media. This silence speaks volumes—the fear of a Brahmin resurgence is very real for the D.Model.” என்று இந்து மக்கள் கட்சி சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த புகைப்படம் வைரலாகிறது. ” பிராமணர்களின் இந்த எழுச்சி தமிழகத்தில் முதல்முறை… திராவிட திருடர்களை விரட்டுவோம் தமிழகத்திலிருந்து” என்றும் இந்த புகைப்படம் ஷேர் செய்யப்படுகிறது.

Screenshot from X @Indumakalktchi

X Link/Archived Link

Screenshot from X @ashok777_kalam

X Link/Archived Link

Screenshot from X @MRagavakrishna

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டாரா?

Fact Check/Verification  

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படத்துடன் தொடர்புடைய படம் ஒன்று கடந்த மே 11, 2012 அன்று இடம்பெற்றிருந்தது. கடந்த மே 10, 2012 அன்று இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்டிருந்தது.

சந்திரசேகரன் ஆறுமுகம் என்கிற புகைப்படக்கலைஞர் இப்புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் சென்னை பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நபர்களும், வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள நபர்களும் ஒன்று என்பதையும் நம்மால் கண்டறிய முடிந்தது. இரண்டு புகைப்படங்களும் திருவல்லிக்கேணி பிரம்மோற்சவ நிகழ்வில் எடுக்கப்பட்டது என்பதையும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடிந்தது. அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது பிராமணர்களின் எழுச்சி பேரணி என்று பரவி வருகிறது.

Also Read: பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளா இவர்?

Conclusion

தமிழகத்தில் பிராமணர்களின் எழுச்சி ஊர்வலம் என்று பரவும் புகைப்படம் பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ நிகழ்வில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Image from photography website, Dated May 11, 2012


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,430

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.