Claim: ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல்
Fact: வைரலாகும் வீடியோ பிரேசில் தீவிபத்து நிகழ்வாகும்.
ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வீட்டுக்கு அடங்காத பிள்ளையை! ஆசிரியர் திருத்தலாம்! ஆசிரியருக்கும் அடங்க மறுக்கும் பிள்ளையை போலீஸ் திருத்தும்! ஈரானின் பதில் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் ராணுவத் தளங்கள்!” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விரட்டியடிக்கப்பட்டாரா?
Fact Check/Verification
ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்டு 11, 2024 அன்று Poratal Roma என்கிற செய்தி ஊடக சமூக வலைத்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில், ”A large fire broke out in a warehouse located behind a store on Dr. Isaias Antunes Avenue, in Novo Progresso, near BR-163, this Saturday, the 11th. The fire quickly spread, spilling oil onto the streets, reaching nearby stores and businesses” என்று கூறப்பட்டிருந்தது.
வடக்கு பிரேசிலில் அமைந்துள்ள நோவா ப்ராக்ரஸோ என்கிற பகுதியில் வணிகப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்து நிகழ்வே இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதல் என்று பரவுகிறது.
Also Read: பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளா இவர்?
Conclusion
ஈரான் தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேல் என்று பரவும் வீடியோ பிரேசிலில் ஏற்பட்ட தீவிபத்து வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X Post from, @RomaNewsOficial, August 11, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)