Sunday, April 27, 2025
தமிழ்

Fact Check

நீட் பயிற்சி மையம் அமைப்பதாக ஸ்டாலின் கூறினாரா?

banner_image

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில்  தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நீட் பயிற்சி மையம் குறித்து பரவும் தகவல்
Source: Facebook

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் களமே பரபரப்பாக இருந்து வருகின்றது. இந்த தேர்தலில் வெற்றியைப் பெற அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றது.

தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இம்முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகின்றார். அதில் முக்கியமான மாற்றம் நீட் தேர்வு ரத்தாகும்.

இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

https://www.facebook.com/permalink.php?story_fbid=245748040382245u0026amp;id=100048411518175

Archive Link: https://archive.vn/Bc1DM

https://www.facebook.com/sriram.ganesan.902/posts/4195097783851761

Archive Link: https://archive.vn/P60RQ

https://www.facebook.com/palaniswamy.nk/posts/4133444320001166

Archive Link: https://archive.vn/Kgucz

இப்பதிவை பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு,  நீட் தேர்வு ரத்து என்று கூறிவிட்டு, தற்போது பயிற்சி மையம் அமைக்கப்படும் என்கிறீர்களே இதில் எது உண்மை? என்று கேட்டு வருகின்றார்கள்.

நீட் தேர்வு குறித்தும் ஸ்டாலின் குறித்தும் வைரலாகும் பதிவு
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைப் போல் ஸ்டாலின் அவர்கள் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறினாரா என்பதை அறிய இதுக்குறித்து தீவரமாக ஆய்வு செய்தோம்.

நமது ஆய்வில்  ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி ஆரம்பிக்கப்படும் என்று கூறிய கருத்து உண்மைதான் என்பது தெரிய வந்தது.

ஆனால் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அல்ல என்பதும், அது மகளிருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரக் கூடிய Tally போன்ற கம்ப்யூட்டர் பயிற்சிகளையும் மற்றும் வேறு பிற பயிற்சிளையும் பயிற்றுவிக்கும் இலவச பயிற்சி மையம் என்பதும்  நமக்கு தெரிய வந்தது.

தமிழகத்தின் கொளத்தூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இம்மையம் செயல்பட்டு வருகின்றது. இப்பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக இந்த உண்மை நமக்கு தெரிய வந்தது.

இப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ஒரு பதிவு உங்கள் பார்வைக்காக.

https://www.facebook.com/permalink.php?story_fbid=848273585557948u0026amp;id=769481703437137

இப்பயிற்சி மையத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் சொந்த தொகுதியான கொளத்தூரில் 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்துள்ளார். இதுக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Twitter

சமீபத்தில் இந்த பயிற்சி மையம் சார்பில் ஏற்படுத்தப்பட்ட விழாவில் ஸ்டாலின் கலந்துக் கொண்டார். இவ்விழாவில் பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்று பயிற்சி மையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என்று கூறினார்.

இந்த கருத்தே தவறாகத் திரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் நீட் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதாக பரப்பப்படுகின்றது

ஸ்டாலின் அவர்கள் பேசிய வீடியோ பதிவு உங்கள் பார்வைக்காக:

https://www.youtube.com/watch?v=qwgWqk2Rxa8
Courtesy: DMK IT Wing

Conclusion

அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்பது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரக் கூடிய பயிற்சிகளை அளிக்கக் கூடிய ஒரு பயிற்சி மையமாகும். இதை நீட் பயிற்சி மையம் என்று தவறாக திரித்து  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த உண்மையை நன்கு ஆய்ந்து உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Anitha Achievers Acadamy: https://www.facebook.com/Anitha-Achievers-Academy-769481703437137/

M.K.Stalin: https://twitter.com/mkstalin/status/1098546817891880960?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1098546817891880960%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Fdmk-leader-stalin-inaugurate-anitha-achievers-academy-from-kolathur%2Farticleshow%2F68098198.cms

DMK IT Wing: https://www.youtube.com/watch?v=qwgWqk2Rxa8


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,944

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.