Claim: பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்த காட்சி
Fact: வைரலாகும் புகைப்படத்தில் சீமானின் படத்தில் பெரியார் உருவம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”Picture of the day” என்றும், ”ஈவேரா வை செருப்பால் அடித்த மே 17 இயக்க போராட்டவாதிகள் மற்றும் பெரியாரிஸ்ட்கள். என்னையா குடிபோதையில் நடந்த போராட்டமா ?” என்பதாகவும் இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்ததாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 22, 2025 அன்று பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் அவதூறாக பேசியதைக் கண்டிக்கும் வகையில் பெரியார் ஆதரவாளர்கள் இணைந்து சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சீமான் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.


இந்த போராட்டத்தின்போது வைக்கப்பட்டிருந்த சீமான் உருவப்படத்தில் பெரியார் படத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
Also Read: எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகைப்படத்திற்கு பனையூரில் மாலை அணிவித்த விஜய் என்று பரவும் தகவல் உண்மையா?
Conclusion
பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
YouTube Video by One India Tamil, Dated January 22, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)