தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தமிழக மாநிலம், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழக காவல்துறையினர் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.
அதனையடுத்து, சிபிஐ விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 27 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ள நிலையில், கூடுதலாக 44 பேர் இணைக்கப்பட்டு 71 பேர் மீது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், “தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்” என்கிற பெயரில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.


Archived Link: https://archive.ph/cczzy

Archived Link: https://archive.ph/ehTAW
சமூக வலைத்தளத்தில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்று பரவும் புகைப்படமானது போலியாக உருவாக்கப்பட்டது என்பது அதன் சாரம்சத்திலேயே தெளிவாகத் தெரிகிறது.
தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று நான்காண்டுகள் ஆகியும் அதில் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதன் பொருட்டு இந்த புகைப்படத்தை போலியாக உருவாக்கி உலாவ விட்டுள்ளனர் சமூக வலைத்தளவாசிகள் சிலர். அதிமுகவினர் இதனை உறுதிப்படுத்தினர்.
மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் வீடியோவும் நமக்குக் கிடைத்தது.
Conclusion:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி என்னும் புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
AIADMK: https://twitter.com/AIADMKOfficial
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)