Claim: அயோத்தி ராம ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றனர்.
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த ஆகஸ்ட் 05, 2022, விலைவாசியேற்றம், வேலையின்மை ஆகியவை குறித்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகும்.
அயோத்தி ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டப்பட்ட அன்று காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றம் வந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஒருபோதும் மறக்காதே. ஒருபோதும் மன்னிக்காதே…. ஆகஸ்ட் 5, 2020 அன்று, ஸ்ரீ ராம ஜென்மபூமியின் அடிக்கல் நாட்டப்பட்டபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு சென்றனர்” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அயோத்தி ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டப்பட்ட அன்று கருப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பிக்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Telegraph india, The Wire உள்ளிட்ட ஊடகங்களில் இப்புகைப்படத்துடன் கடந்த ஆகஸ்ட் 05, 2022 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதன்படி, வேலையின்மை, விலையேற்றம் உள்ளிட்ட நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு கருப்பு ஆடையில் வந்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது.

”Wearing black, Congress leaders stage massive protest; Rahul, others detained” என்று இந்த செய்தி வெளியாகியிருந்தது. மேலும், ராமஜென்ம பூமிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது ஆகஸ்ட் 5, 2020 என்பதும், காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் போராட்டம் நடைபெற்றது ஆகஸ்ட் 5, 2022 என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு ஆடை அணிந்த போராட்டத்திற்கும், ராமஜென்ம பூமிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Also Read: ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?
Conclusion
அயோத்தி ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டப்பட்ட அன்று கருப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பிக்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from Telegraph India, Dated August 05, 2022
Report from The Wire, Dated August 05, 2022
Report from CNN, Dated August 05, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)