Claim: கோவா விபத்தில் 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
Fact: வைரலாகும் வீடியோ காங்கோவில் நடைபெற்ற படகு விபத்து காட்சியாகும்.
கோவா படகு விபத்து காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கோவா விபத்தில் 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 64 பேர் காணவில்லை. அதிக சுமை ஏற்றுவதில் படகு உரிமையாளரின் பேராசை, பயணிகளின் அதீத நம்பிக்கை. மிகவும் சோகம், சோகம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதி ஸ்டாலினை கேலி செய்து வீடியோ வெளியிட்டதா நியூஸ் 7 தமிழ்?
Fact Check/Verification
கோவா படகு விபத்து காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியப்போது அந்த வீடியோ காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்துடன் தொடர்புடையது என்பது நமக்குத் தெளிவாகியது.
இதுகுறித்து, Agora Grands-Lacs கடந்த அக்டோபர் 03, 2024 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் ”அக்டோபர் 3ஆம் தேதி காலை மெர்டி என்கிற இந்தப்படகு காங்கோவின் கிவு ஏரியில் விபத்துக்குள்ளானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Kituku துறைமுகத்திற்கு சில மீட்டர்கள் தொலைவில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது அதில் நிறைய பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


AP வெளியிட்டிருந்த அக்டோபர் 04ஆம் தேதியிட்ட வீடியோவிலும் காங்கோவின் கிவு ஏரியில் நிகழ்ந்த இந்த படகு கவிழ்ந்த விபத்தில் கிட்டதட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, Al Jazeera English உள்ளிட்ட மேலும் செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.
கோவா காவல்துறை தரப்பிலும் இந்த வீடியோ கோமா, காங்கோவைச் சேர்ந்தது; தவறாக கோவா என்று பரப்பப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: கருணாநிதி குடும்பத்திற்கு மட்டும்தான் தகுதி உள்ளதா என திமுக ராஜீவ்காந்தி கேள்வி எழுப்பினாரா?
Conclusion
கோவா படகு விபத்து காட்சி என்று பரவும் வீடியோ காங்கோவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Report By Agora Grands-Lacs, Dated October 3, 2024
YouTube Video By AP, Dated October 4, 2024
X Post By Goa Police, Dated October 5, 2024
(இதுகுறித்த செய்தி நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)