மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கை வசதி, மருத்துவ வசதிகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மக்கள் வாட்ஸ்அப் செய்து தெரிவிக்கலாம் என்று அவரே சொன்னதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலையை எட்டியுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கும், ரெம்டிசிவர் போன்ற மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இச்சூழ்நிலையில், கடந்த 7 ஆம் தேதியன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. மேலும், மா.சுப்ரமணியன் அவர்கள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பதவியேற்று செயலாற்றி வருகிறார்.
இந்நிலையில். “தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை, மருத்துவ வசதி ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே எனக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்குமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.,அவர்கள்
வேண்டுகோள் வைத்திருக்கிறார்.” என்கிற தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.





சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொடர்பான தேவைகளை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் பரவுகின்ற செய்தி குறித்து அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, Greater chennai corporation என்னும் அதிகாரப்பூர்வ சென்னை மாநகராட்சியின் பக்கத்தில் பரவுகின்ற தகவல் பொய்யானது என்று செய்தி வெளியாகியிருந்தது நமக்குத் தெரிய வந்தது.

மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த அதிகாரிகள் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, குறிப்பிட்ட அந்த எண் அமைச்சருக்கு சொந்தமானது என்றாலும், வைரலாகும் தகவலில் உள்ளது போன்ற எந்தவித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை என்பது நமக்கு உறுதியானது. குறிப்பிட்ட அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நமக்கு பதிலளிக்கப்படவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறும் இக்கடினமான சூழ்நிலையில் ஆதாரமற்ற இதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.
Conclusion:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொடர்பான தேவைகளை வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
GCC (Twitter): https://twitter.com/chennaicorp
GCC(Facebook): https://www.facebook.com/GreaterChennaiCorporation/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)