Thursday, April 24, 2025
தமிழ்

Fact Check

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் ஐதராபாத் வீடியோ!

banner_image

Claim: வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ 2016 ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாகும்.



“வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி. மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது! கொடி கம்பத்தின் உயரம் 360 அடி. கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக 60 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது கொடியின் உயரம் 80அடி, அகலம் 120 அடி. தேவைப்படும்போது 12 கொடிகள் (மாற்று) தயாராக உள்ளன! இது ஒரு உலக சாதனை ஆகும். வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக கம்பீரமாக பறக்கும் இந்திய தேசிய கொடி வீடியோவை பலருக்கு பகிருங்கள்! இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்வோம் ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

Archive Link

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சால்வை போட வந்தவரிடம் ‘நிதி கொண்டு வந்தாயா’ என கேட்டாரா சீமான்?

Fact Check/Verification

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் ‘Jokes Ka Jamana’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஐதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக கூறி வைரலாகும் இவ்வீடியோவை ஜனவரி 26, 2017 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ஆன்லைன் பப்ளிசிட்டி எனும் யூடியூப் பக்கத்தில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடியை ஏற்றியதாக கூறி மற்றொரு வீடியோவை பதிவேற்றிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஜூன் 2, 2026 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இவ்வீடியோவையும் வைரலாகும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டு வீடியோக்களிலும் ஒலிக்கப்பட்ட இசை ஒன்றாக இருப்பதை கேட்க முடிந்தது. இதுத்தவிர்த்து, கொடி ஏற்றப்படும் மேடை, வெள்ளை நிற கார் போன்றவை இரு வீடியோக்களிலும் ஒற்றுப்போவதை காண முடிந்தது.

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் சந்திரசேகர ராவ் தெலங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டை நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான தேசியக் கொடி ஏற்றி கொண்டாடியதாக ஜூன் 2, 2026 அன்று இந்துஸ்தான் டைம்ஸில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது. இக்கொடியானது 291 அடியில் ஏற்றப்பட்டதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பரவும் வீடியோ

இதனையடுத்து தேடுகையில் 2017 மார்ச்சில் அட்டாரி எல்லை பகுதியில் 360 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக ANI-யில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. இதுவே அச்சமயத்தில் நாட்டின் மிக உயரமான தேசியக் கொடியாகும். இந்த சாதனை சென்ற வருடம் அக்டோபரில் மீண்டும் அட்டாரி எல்லையில் 418 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

Also Read: இஸ்லாமியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு வழங்கினாரா உதயநிதி ஸ்டாலின்?

Conclusion

வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் கொடி 2016 ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏற்றப்பட்டதாகும். வாகா எல்லையில் 2017 ஆம் ஆண்டில் 360 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் அச்சம்பவத்திற்கும் வைரலாகும் வீடியோவுக்கும் தொடர்பில்லை.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook Post from Jokes Ka Jamana, Dated January 26, 2017
YouTube Video from Online Publicity, Dated June 02, 2016


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.