Monday, March 31, 2025

Fact Check

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகை எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

banner_image

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை வகையைச் சேர்ந்த மூலிகை இது. தன் இனவிருத்திக்காக மகரந்தத்தை ஊதித் தள்ளிக் கொண்டே இருக்கும் என்பதாக தாவரம் ஒன்றின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளப் பக்கங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நியூஸ்செக்கர் வாசகர் ஒருவர் இதுகுறித்த உண்மையறிய நம்மிடம் கேட்டிருந்தார்.

அழிவின்
Source: Facebook

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவத்துடன் இணைந்து சித்த மருத்துவம் உள்ளிட்ட நாட்டு மருத்துவ முறைகளும் கொரோனா தாக்கத்தின் வீரியத்தைக் குறைக்க பெரும் பங்காற்றி வந்தன.

Also Read: கொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?

அது தொடர்பான வதந்திகளும், போலி மருத்துவ முறைகளும், நாட்டு மருத்துவமே கொரோனாவிற்கு முழுமையான குணத்தைத் தரும் என்பது போன்ற ஆதாரமற்ற செய்திகளும் மக்களிடையே பரவியது.

இதையெல்லாம் தாண்டி உண்மையாகவே பலனளிக்கக் கூடிய கபசுரக்குடிநீர் போன்ற சில மருந்துகள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் மக்களின் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அரசால் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும், மூலிகைகள், நாட்டு மருத்துவம் தொடர்பான பொய்ச்செய்திகள் இன்றளவிலும் குறைந்தபாடில்லை.

அவ்வகையில், தற்போது “அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை வகையைச் சேர்ந்த மூலிகை. இது, தன் இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளி கொண்டே இருக்கும் அடர்ந்த மழைப்பொழிவு காடுகளில் மட்டுமே வளரும் இந்த மூலிகைகள் இயற்கை தந்த பேரதிசயம்” என்பதாக ஒரு தாவரம் போன்ற புகைப்படம் அல்லது வீடியோவுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வாசிகள் இதனைப் போட்டி போட்டுக்கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.

அழிவின்
Source: Facebook

Facebook Link

அழிவின்
Source: Facebook

Facebook Link

அழிவின்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகைத் தாவரம் இது. இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளிக் கொண்டே இருக்கும் என்பதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய முதலில் அக்குறிப்பிட்ட தாவரம் போன்று பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அப்போது, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களிலேயே பலரும் இதற்கு விளக்கமளித்துள்ளது நமக்குத் தெரிய வந்தது.

Facebook

தொடர்ந்து ஆங்கில வரிகளில் “oodhu paavai” என்பதாக நாம் தேடியபோது குறிப்பிட்ட அந்த வைரல் வீடியோவில் இருப்பது உண்மையான தாவரம் அல்ல என்பது நமக்குத் தெரிய வந்தது.

லண்டனைச் சேர்ந்த Luke Penry, என்கிறவர் உருவாக்கிய படைப்பு அது.

Instagram will load in the frontend.

3டி அனிமேஷனில் நகரும் வகையிலான உருவாக்கங்கள் மற்றும் இயற்கை சார்ந்த படைப்புகளை கற்பனையாக உருவாக்கும் படைப்பாளரான அவர் உருவாக்கிய கற்பனை வடிவமைப்பு இது.

குறிப்பிட்ட வைரல் வீடியோவிலும் வாட்டர் மார்க்காக அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், தன்னுடைய 3டி படைப்பு குறித்த போலிச்செய்திகள் “ஊதுபாவை” என்கிற தாவரம் என்பதாக எப்படி வைரலாகிறது என்பது குறித்து பல்வேறு பதிவுகளையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் வீடியோ மட்டுமின்றி இயற்கையில் தாவரங்கள் இப்படியெல்லாம் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நாம் வியக்கும் வகையில் Branch Bloater, Jungle pipe, crack of dawn என்னும் வகையில் பல்வேறு கலைப்படைப்புகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் Luke.

Conclusion:

அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகைத் தாவரம் இது. இனவிருத்திக்காக தன் மகரந்தத்தை இப்படி ஊதித் தள்ளிக் கொண்டே இருக்கும் என்பதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ தகவல் முற்றிலும் தவறானது; குறிப்பிட்ட வீடியோ 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Luke என்பவரின் கலைப்படைப்பு என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Luke Penry

Instagram

Twitter

Nature Laboratory

NMPB

Facebook

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,631

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage