Wednesday, April 23, 2025

Fact Check

ஓபிஎஸ் பாணியில் தியானம் செய்தாரா டி.கே.சிவக்குமார்?

banner_image

Claim: ஓபிஎஸ் பாணியில் தியானம் செய்தார் டி.கே.சிவக்குமார்.
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியடைந்ததை தொடர்ந்து யார் அடுத்த முதல்வர் என்பது இழுபறியாகவே இருந்த நிலையில், கடைசியாக சித்தாராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும் இருப்பார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் டி.கே.சிவக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாணியில் தியானம் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம்
Screenshot from Twitter@BS_Prasad
ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம்
Screenshot from Facebook//sudhakar.selvamoni
ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம்
Screenshot from Facebook / குன்னத்தூர் முதல்வர்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் புகைப்படத்தை காண்கையிலேயே வேறொருவரின் படத்தில் மேல் டி.கே.சிவக்குமாரின் படம் வைக்கப்பட்டுள்ளதை தெளிவாக அறிய முடிகின்றது.

இருப்பினும் பலர் இப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து நிரூபிக்க விரும்பினோம். எனவே வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘OPS Sticks With Merger Demands’ என்று தலைப்பிட்டு ஏசியன் லைட் எனும் ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் ஓபிஎஸ் தியானம் செய்யும் படத்தை பயன்படுத்தி இருந்ததை காண முடிந்தது. அப்படத்தின் கீழ், “Former Tamil Nadu Chief Minister O. Panneerselvam sitting in meditation in front former Tamil Nadu CM Jayalalithaa’s memorial at Chennai’s Marina beach (முன்னாள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியின் முன் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார்)“என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம்
Screengrab from Asianlite

இந்த படத்தை எடிட் செய்தே மேற்கண்ட படம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என நமக்கு தெளிவாகியது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக வைரலாகும் படம்

இதனடிப்படையில் காண்கையில் ஓபிஎஸ் பாணியில் தியானம் செய்தார் டி.கே.சிவக்குமார் என்று பரப்பப்படும் படம், உண்மையில் ஓபிஎஸ் 2017 ஆம் ஆண்டு தியானம் செய்த படத்தை எடிட் செய்து பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?

Conclusion

ஓபிஎஸ் பாணியில் டி.கே.சிவக்குமார் தியானம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Asian Lite, Dated April 21, 2017


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.