Sunday, April 13, 2025

Fact Check

பழனிவேல் தியாகராஜன் இந்தியக் குடிமகன் அல்ல என பரவும் வதந்தி

banner_image

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாட்டு இந்தியக் குடியுரிமையைப் பெற்று விட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பழனிவேல் தியாகராஜன் இந்தியக் குடிமகன் அல்ல என பரவும் தகவல்

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதில் ஜக்கி வாசுதேவ் குறித்தும், கோயில்களை தனியார் வசம் அளிக்க வேண்டும் என்கிற அவரின் கோரிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்பின் ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்கள் அமைச்சர் குறித்து பல ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை  தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இவற்றில் ஒன்றாக பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டதாகவும், தற்போது அவரிடம் வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை (OCI) மட்டுமே உள்ளதாகவும் பரப்பி வருகின்றனர்.

பழனிவேல் தியாகராஜன் குறித்த பதிவு - 1

Archive Link: https://archive.ph/JxK0H

பழனிவேல் தியாகராஜன் குறித்த பதிவு - 2

Archive Link: https://archive.ph/o7JEO

பழனிவேல் தியாகராஜன் குறித்த பதிவு - 3

Archive Link: https://archive.ph/IcmVE

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பழனிவேல் தியாகராஜன் இந்தியக் குடிமகன் அல்ல என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் ஒரு வெளிநாட்டு இந்தியக் குடிமகனுக்கு இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தலில்களில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை இல்லை எனும் தகவல் நமக்கு தெரிய வந்தது. இத்தகவலானாது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான எம்பஸிஸ் ஆஃப் இந்தியாவில் (Embassies of India) இடம்பெற்றுள்ளது.

OCI Benefits
Source: Ministry of External Affairs

இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் அவரது ஓட்டுரிமை ரத்து செய்யப்பட்டிருக்கும். அவரால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கவே இயலாது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவல் பொய்யானதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும்  சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலை மறுத்து பதிவு ஒன்றை தனது அதிகார்ப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன் அவர்களின் மறுப்பு
Source: Twitter

Conclusion

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Ministry Of External Affairs: https://eoi.gov.in/eoisearch/MyPrint.php?3929?001/0019#:~:text=The%20OCI%20is%20not%20entitled,hold%20employment%20in%20the%20Government.

Dr. P. Thiaga Rajan: https://twitter.com/ptrmadurai/status/1395092099129769985


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,713

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage