Claim: இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதல்வர்
Fact: வைரலாகும் செய்தி தவறாக பரவி வருகிறது.
இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சோத்துல உப்பு போட்டு தானே திங்கிறீங்க…* ?நம்ப பாத்திமா (முஸ்லிம்) அக்கா, எங்க ரோஸிலின் (கிறித்துவ) அக்காவும் தான் பொங்கல் தொகுப்பு வாங்கி சென்று வீடு முழுக்க சாணம் கொண்டு மெழுகி விட்டு பொங்கல் இட்டு சூரியனை வணங்குவாங்க !” என்று இந்த செய்தி பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதல்வர் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கும் வீடியோ செய்தி பல்வேறு ஊடகங்களிலும் நேரலையாக வெளியாகியிருந்தது. அதில், அனு, சங்கீதா, நித்யா, ஆசிமா பேகம் என்று பொங்கல் பரிசு முதல்வர் ஸ்டாலின் கைகளால் வாங்கிய அனைத்து பெண்களுடைய பெயரும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியிலேயே மைக்கில் ஒலிக்கப்பட்டிருந்தது.
வைரலாகும் புகைப்படச் செய்தியில் ரோஸ்லின் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெண்மணியின் பெயர் நித்யா என்பதும் தெரிய வந்தது. மற்றொருவர் ஆசிமா பேகம் என்றும் தெரிந்தது. மதச்சார்பின்றி அனைத்து மதத்தவர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.
இதன்மூலம், இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் செய்தி தவறானது என்பது தெளிவாகிறது.
Conclusion
இந்துக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் வழங்கிய முதல்வர் என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video From, Sun News, Dated January 09, 2025
YouTube Video From, Thanthi TV, Dated January 09, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)