சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று மத்தியப் பிரதேசத்தின் தற்போது மத்தியப் பிரதேசத்தின் சத்னா தொகுதியின் பாஜக எம்.பியான கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பரப்பரப்புக்கும் பாஜக தலைவர்களுக்கும் அப்படி என்னதான் தொடர்போ என்று தெரியவில்லை. அப்பளம் சாப்பிட்டால் கொரோனோ போகும், மாட்டு கோமியம் சாப்பிட்டால் கொரோனா போகும் என பொது வெளியில் பேசி வெகுஜன மக்களின் கேலிக்கு அடிக்கடி ஆளாகி வருகின்றார்கள்.
இந்த வகையில் தற்போது பாஜக எம்.பி. கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று மக்களவையில் பேசியதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குட்கா மென்ற மணமகனை அறைந்த மணமகள்; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
Fact Check/Verification
மக்களவையில் பாஜக எம்.பி. கணேஷ் சிங், சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று பேசியதாக வைரலானதைத் தொடர்ந்து உண்மையிலேயே கணேஷ் சிங் இவ்வாறு பேசினாரா என்பது குறித்து தேடினோம்.
இந்த தேடலில் கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று பேசவில்லை, ஆனால் சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என பேசியுள்ளார் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்கள் மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. அந்த விவாதத்தில் பாஜக எம்.பி. கணேஷ் சிங்,
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆராய்ச்சியில் சமஸ்கிருதம் பேசுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனக் கண்டறிந்துள்ளது.
அதேபோல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், கணினி புரோகிராமிங்கை சமஸ்கிருததில் எழுதினால் அது பிழையற்றதாக இருக்கும் எனக் கண்டறிந்துள்ளது.
சமஸ்கிருத மொழியைப் பேசி வந்தால் அது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை எப்போதுமே சீராக வைத்திருக்கும்.
உலகம் முழுவதும் பேசப்படும் சில இஸ்லாமிய மொழிகள் உட்பட 97% மொழிகளின் அடிப்படை சமஸ்கிருதமே.
என்று பேசியுள்ளார்.
இந்த செய்தியானது புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்த செய்தியில் பயன்படுத்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்காணப்படும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கூடிய கூட்டமா இது?
Conclusion
சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என்று பாஜக எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக பரவும் தகவல் தவறானது என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)