Thursday, April 24, 2025
தமிழ்

Fact Check

ஜஸ்டின் ட்ரூடோவிடம் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியதாக பரவும் பழைய வீடியோ!

banner_image

Claim: கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும். அச்சம்பவம் உண்மையில் 2018 ஆம் ஆண்டில் நடந்ததாகும்.

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்ததை தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே இருந்த நட்புறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது வைத்த குற்றச்சாட்டு குறித்து எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் கேள்வி எழுப்பியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ

X Link | Archived Link

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ

Facebook Link

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக  வைரலாகும் வீடியோவில் தி கேனடியன் பிரஸ் (The Canadian Press) எனும் சேனலின் லோகோ இடம்பெறிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் தி கேனடியன் பிரஸ் யூடியூப் பக்கத்தில் மார்ச் 01, 2018 அன்று “Scheer accuses Trudeau of damaging Canada-India relationship”  என்று தலைப்பிட்டு இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில், Justin Trudeau is defending an adviser who suggests the Indian government played a role in a convicted terrorist attending events with the prime minister. Tory Leader Andrew Scheer is accusing Trudeau of “incompetence” over the incident. (Feb. 28, 2018)” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதை வைத்து பார்க்கையில் கனடா பிரதமர் 2018 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தானி தீவிரவாதி ஜாஸ்பல் அத்வால் இருந்ததை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாகவே இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

ஜாஸ்பல் அத்வால் 1986 ஆம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் மால்கியாத் சிங் நடுரோட்டில் வைத்து சுடப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று முடிவாகி 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவனாவான். இவன் 2018-ல் மும்பை மற்றும் டெல்லியில் நடந்த ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதுடன், ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி ட்ரூடோ மற்றும் கனடா அமைச்சர் அமர்ஜீத் சோஹி போன்றோருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டான்.

இவ்விஷயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுக்குறித்து கனடா பாராளிமன்றத்தில் ஆண்ட்ரூ ஷியர் கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்விக்கு, தனக்கு சங்கடத்தை ஏற்படுத்த இந்தியாவே வேண்டுமென்று ஜஸ்பாலை அந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்தாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இந்திய அரசு இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று அச்சமயத்தில் மறுத்திருந்தது.

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை தற்போது நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது.

Also Read: ராகுல் காந்தி கையில் 420 எண்ணிட்ட பேட்ஜ் கட்டியிருப்பதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

கனடா எதிர்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ பழைய வீடியோ என்பதையும், அச்சம்பவம் உண்மையில் 2018 ஆம் ஆண்டில் நடந்தது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from The Canadian Press, Dated March 01, 2018
Report from NDTV, Dated February 22, 2018

Report from CNN, Dated March 01, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.