Friday, April 11, 2025

Fact Check

காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் பொய் செய்தி!

banner_image

Claim: காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி

Fact: இத்தகவல் தவறானதாகும். அசுத்தமான குடிநீரை குடித்ததால் இக்கிராமத்தின் வெவ்வேறு பள்ளிகளை சார்ந்த 16 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இத்தகவலை தமிழக பாஜகவின் ஊடக அணியின் மாநிலத் துணைத்தலைவர் அனந்த கிருஷ்ணன் உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர்.

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from X@Ananthkrisnan

X Link | Archived Link

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from X@ananthamharshi

Archived Link

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from X@Murugan_G12

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த 25 மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய, வைரலாகும் தகவலுடன் பகிரப்படும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடலை தொடங்கினோம்.

இத்தேடலில் “பரமக்குடி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் மாணவர்கள் தீவிர சிகிச்சை..” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 03, 2023 அன்று சமயம் தமிழில் வெளியிட்ட செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்

பரமக்குடி பொன்னையா புறத்திலிருக்கும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய சத்துணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அழுகிய முட்டையை உண்டதால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளிவந்துள்ளதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து மீனங்குடி கிராமத்தில் இதுப்போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதா என தேடினோம். அதில் இக்கிராமத்தில் பராமரிப்பற்ற நிலையில் இருந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்து, வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டதாக தினமலரில் செய்தி ஒன்று வெளிவந்திருப்பதை காண முடிந்தது.

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல்

மாலை மலர், தி நியூஸ் லைட் போன்ற ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அவையும் குடிநீர் அசுத்தம் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்திருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது என்னவென்றால்,

  1.  மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மையே. ஆனால் அதற்கு காரணம் காலை உணவு கிடையாது. அசுத்தமான குடிநீராகும்.
  2. அதேபோல் வைரலாகும் தகவலுடன் பரப்பப்படும் புகைப்படத்துக்கும் இச்சம்பவத்தும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்புகைப்படம் பிப்ரவரி மாதத்தில் பொன்னையா புறத்தில் மதிய உணவில் அழுகிய முட்டையை கொடுக்கப்பட்டதால் நிகழ்ந்ததாகும்.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Conclusion

காலை உணவு சாப்பிட்ட மீனங்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பரமக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Samayam Tamil
Report from Dinamalar


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,713

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage