Claim
திராவிட கருப்பர் கூட்டத்தின் கொத்தடிமை கீ.வீரமணிக்கு கோல்டன் குளோப் விருது கொடுப்பது போல் வெட்கக்கேடான செயல் வேறேதும் இல்லை. (Twitter @SudarshanTheva3)

Fact
தினமலரில் வெளியாகியிருந்த செய்தியில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு RRR படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு திரைப்படப் பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்காக இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இசையமைப்பாளர் கீரவாணி என்பதை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி என்பதாகப் புரிந்து கொண்டு மேற்கண்ட பதிவை தினமலர் செய்தியின் கீழ் இடுகையாக இட்டிருந்தார் பாஜகவின் உறுப்பினரான சுதர்ஷன். அதற்கு பலரும் அது கீரவாணி; கி.வீரமணி அல்ல என்று விளக்கப்பதிவு இட்ட நிலையில் அவர் தனது பதிவை நீக்கி விட்டார்.

Result: False
Sources
Facebook post, From Dinamalar, Dated January 11, 2023
Twitter post, From Ilaiyaraja, Dated January 11, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)