Claim
விருதுநகர்-சாத்தூர் பைபாஸ் சாலை என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இதே தகவலையுடைய மற்ற பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?
Fact
விருதுநகர்-சாத்தூர் பைபாஸ் சாலை என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் படத்தில் காணப்படும் சாலை போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள சாலை என அலாமி இணையத்தளத்தின் வாயிலாக அறிய முடிந்தது.

இதுத்தவிர்த்து வேறு சில இணையத்தளங்களிலும் இச்சாலை போர்ச்சுக்கல் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?
Result: False
Sources
Alamy.com
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.