மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு உணவை தூக்கி எறிந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு உணவை தூக்கி எறிந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ பிரேம்களாக பிரித்து ஆய்வு செய்ததில் History Upscaled எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ தரமுயர்த்தி, வண்ணப்படமாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் கேப்ரியல் வெய்ரே எனும் திரைப்பட இயக்குனரால் பிரெஞ்சு இந்தோ சீனாவில் (தற்போதைய வியட்நாம்) இரண்டு பிரெஞ்சு பெண்கள் வியட்நாமிய சிறுவர்களை நோக்கி சில்லறைகளை வீசி எறிந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடியதில் Catalogue Lumiere எனும் இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ ஏப்ரல் 28, 1899 மற்றும் மார்ச் 2, 1900-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் படம் பிடிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத் 1926 ஆம் ஆண்டுதான் பிறந்தார்.

மேலும் அந்த கட்டுரையில் வீடியோவில் காணப்படும் பெண்மணி மதாமே பால் டோமர் என்றும், அவர் கூட இருக்கும் சிறுமி அவரின் மகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

Also Read: மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?
Conclusion
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு உணவை தூக்கி எறிந்ததாக பரவும் தகவல் தவறானது என்பதும், வைரலாகும் வீடியோ ராணி எலிசபெத் பிரப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
Result: False
Sources
YouTube Video By History Upscaled, Dated February 11, 2021
Catalogue Lumiere Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)