சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024
சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024

HomeFact Checkகள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: முதல்வருக்கு நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை

Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களில் பாதிப்படைந்தோர் குடும்பத்தினரைச் சந்திக்க செல்லாமல் நயன்தாராவை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று புகைப்படம் ஒன்று பரவுகிறது.

“நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை!” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி
Screenshot from x @RatnaKing20

X Link/Archived Link

Screenshot from x @Tamilmay

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Fact Check/Verification

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த ஜூன் 04, 2022ல் ”Nayanthara and Vignesh Shivan invite Chief Minister M.K. Stalin to their wedding” என்று IndiaGlitz உள்ளிட்ட ஊடகங்களில் இதுகுறித்த புகைப்படச்செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட புகைப்படமே தற்போது எடுக்கப்பட்டதாகப் பரவி வருகிறது.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Conclusion

கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report From, India Glitz, Dated June 04, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular