ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024

HomeFact Checkகோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அண்ணாமலை

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு என் மண் என் மக்கள் யாத்திரையில் எடுக்கப்பட்டதாகும்.

கோவையில் போட்டியிடும் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, மக்களவைத் தேர்தலில் வெல்வதற்காக பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஒரிஜினல் பிராட்டுகாரபய இந்த அண்ணாமலை. ஓட்டுக்கு பணம் தரமாட்டேனு சொல்லிட்டு இப்போ என்னத்த கொடுக்கிறான் பாருங்க” என்று பல்வேறு பதிவுகளுடன் இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @DilipKannan

X Link/Archived Link

Screenshot from X Anti_CAA_23

X Link/Archived Link

Screenshot from X slbala

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?

Fact Check/Verification

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் பரவிய நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருப்பதாக கோயம்புத்தூர் கலெக்டர் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக கலெக்டர் கோயம்புத்தூர்
அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.

 பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க கலெக்டர் கோயம்புத்தூர்
அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”
என்று தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த வீடியோ காட்சி கடந்த ஜூலை 29, 2023 அன்று ”LIVE : ராமேஸ்வரம் மீனவர் வீட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | நேரலை காட்சிகள் | Annamalai” என்று வெளியாகியிருந்த செய்தியின்படி அவர் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது நடைபெற்ற நிகழ்வில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு உறுதியாகியது.

இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் கலெக்டர், “வைரலாகிய வீடியோ சமீபத்தியது அல்ல; கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவுகிறது என்பது தெளிவாகிறது.

 Also Read: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு என் மண் என் மக்கள் பயணத்தின்போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post From, K.Annamalai, Dated March 29, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular