செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkநடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் ரசிகர்கள் அடி, உதை

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு அவரை கமல் ரசிகர்கள் தாக்கியபோது எடுக்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் க்கு சரமாரி அடி உதை குடுத்த ரசிகர்களால் பரபரப்பு” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from x @prsd5001

X Link/Archived Link

Screenshot from X @MaariBala_Offl

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?

Fact Check/Verification

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2015ஆம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த இந்த வீடியோ கிடைத்தது.

அதில், “Actor Sivakarthikeyan attacked by kamal fans at Madurai airport” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் அவர் பேட்டி ஒன்றில் தன்னை ரஜினி ரசிகர் என்று கூறியதாலும், கமல் குறித்து பேசியதாலும் அவர் மீது மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் அப்போதே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report By Vikatan, Dated September 20, 2015
Report By FilmiBeat, Dated September 21, 2015
YouTube Video From, News 7 Tamil, Dated September 20, 2015

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular