செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024

HomeFact Checkஅம்பானி குடும்பத்தினர் தங்க உடையில் மின்னுவதாகப் பரவும் AI புகைப்படங்கள்!

அம்பானி குடும்பத்தினர் தங்க உடையில் மின்னுவதாகப் பரவும் AI புகைப்படங்கள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தங்க உடையில் மின்னும் அம்பானி குடும்பத்தினர்

Fact: வைரலாகும் புகைப்படங்கள் போலியாக AI மூலமாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

அம்பானி குடும்பத்தினர் தங்கத்தால் ஆன உடையில் மின்னுவதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

“மோடி தள்ளுபடி செய்த கடன் தொகைகள் எப்படி எல்லாம் மின்னுகிறது பாருங்கள்.” என்றும், ”அளவாக ஆடுங்கள். 40 கோடி மக்கள் ஒருவேளை சோறுக்கே வழி இல்லாமல் இருக்கிற நாடு இது” என்றும் இப்புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அம்பானி
Screenshot from x @nancy_viji

X Link/Archived Link

Screenshot from x @im_inba1

X Link/Archived Link

Screenshot from x @VigneShVijayjos

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?

Fact Check/Verification

அம்பானி குடும்பத்தினர் தங்கத்தால் ஆன உடையில் மின்னுவதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் Anant Ambani என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”Beauty of AI” என்று பகிரப்பட்டிருந்தது.

Instagram will load in the frontend.

தொடர்ந்து, நம்முடைய தேடலில் ”Radhika Merchant Ambani fan club” என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மே மாதம் #Photoshop என்கிற ஹேஸ்டேக்குடன் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தங்க ஆடையை அணிந்திருக்கும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது மட்டுமின்றி AI மூலமாக உருவாக்கப்பட்ட அம்பானி குடும்பத்தினரின் பல்வேறு புகைப்படங்களும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

 மேலும், வைரலாகும் புகைப்படங்களை hivemoderation இணையதளத்தில் பதிவிட்டு ஆராய்ந்தபோது குறிப்பிட்ட புகைப்படங்கள் 99.9% செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் 2019ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்தே குறிப்பிட்ட தங்க உடை புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு உறுதியாகியது.

Also Read: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

அம்பானி குடும்பத்தினர் தங்கத்தால் ஆன உடையில் மின்னுவதாகப் பரவும் புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources

hivemoderation.com
Facebook Post from, Radhika Merchant Ambani fan club , Dated May 23, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular