ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

HomeFact Checkவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானது என்று புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைக்காட்சியின் தரப்பு தெளிவு செய்துள்ளது. அதேபோல் இத்தகவல் தவறானது என பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி திடீரென மரணமடைந்த நிலையில் அத்தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டு

X Link | Archive Link

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டு

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

Fact Check/Verification

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக நியூஸ்கார்டுகள் வைரலானதை தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என அறிய பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு விசாரித்தோம். அவர் இத்தகவல் தவறானது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டுகள் புதிய தலைமுறை மற்றும் தந்தி தொலைகாட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டுகள் பகிரப்பட்டுள்ளதா என தேடினோம்.

இத்தேடலில் இவ்விரு நிறுவனங்களிலும் வைரலாகும் நியூஸ்கார்டுகள் வெளியிட்டிருக்கப்படவில்லை என அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் தந்தி தொலைக்காட்சியில் பாஜக கூட்டணியிலிருந்து பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

X Link | Archive Link

இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவர் இவானி மற்றும் தந்தி தொலைக்காட்சி டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டுகள் விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்று இவ்விருவரும் தெளிவு செய்தனர்.

Also Read: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

Conclusion

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Phone Conversation with Ivany, Digital head, Puthiya Thalaimurai
Phone Conversation with Vinothkumar, Thanthi TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular