வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024
வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024

HomeFact Checkவங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்து அதிகாரி என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்து அதிகாரி என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்துக்கள்

Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் ஒரு இஸ்லாமிய அரசு ஊழியர்.

வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்துக்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பங்களாதேஷில் ஒரு இந்து ஆசிரியர் ஒருமுறை அவர் கற்பித்த முஸ்லீம் மாணவர்களால் அவமதிக்கப்பட்டார் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ” என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from x ashok777_kalam

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

Fact Check/Verification

வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்துக்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 19ஆம் தேதியன்று வங்கதேசத்தின் Chapa Nawabganj நகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணிபுரியும் தெளபீக் இஸ்லாம் என்பவர் பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட் வைத்திருந்தார் என்பதாக இளைஞர்கள் சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்துள்ளனர்.

Anti discrimination மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இளைஞர்கள் என்று Bangla BD News24 வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள நிலையில் தெளபீக் தனது வேலையை ராஜினாமா செய்தார் என்கிற தகவலும் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர் வேலையை ராஜினாமா செய்த வீடியோவே அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதாகப் பரவி வருகிறது.

 Also Read: தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

வங்கதேசத்தில் இஸ்லாமியர்களால் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படும் இந்துக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report By, bdnews24, Dated August 21, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular