வெள்ளிக்கிழமை, ஜூலை 19, 2024
வெள்ளிக்கிழமை, ஜூலை 19, 2024

HomeFact Checkபிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இலங்கையைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது மறைந்தார்.

Fact: வைரலாகும் செய்தி போலியாக பரவி வருகிறது. அப்துல் ஹமீது இதனை தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர் ஐயா உங்கள் மறைவு தமிழ்ப் பேருலகத்திற்கே பேரிழப்பு” என்றெல்லாம் அவர் மறைந்துவிட்டதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Screenshot from x @eelam2010

X Link/Archived Link

Screenshot from x @VALLATHARA84848

X Link/Archived Link

Screenshot from x @lakshman241082

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Fact Check/Verification

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

சமூக ஊடகங்களில் இடம்பெற்றிருக்கும் அப்துல் ஹமீதுவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தேடியபோது அவர் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

“நான் இறக்கவில்லை….எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது” என்று இதுகுறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதன்மூலம், தான் நலமுடன் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Conclusion

பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது இறந்துவிட்டதாகப் பரவும் செய்தி வதந்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from, B.H. Abdul Hameed, Dated June 24, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular