Fact Check
பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகையிடப்பட்டதா?
Claim
பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகையிடப்பட்டதாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Fact
பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகையிடப்பட்டதாக வீடியோ பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் ராகுல் யாதுவன்ஷி என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பீகார் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு (நவம்பர் 14) முன்பு நவம்பர் 9, 2025 அன்றே வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருந்தது.

வைரலாகும் வீடியோவில் பீகாரின் நஹாஸ் ருபாலி பகுதியில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப்பள்ளியின் பெயர்ப்பலகை இருப்பதை காண முடிந்தது. கூகுள் மேப்பின் உதவியுடன் இதை உறுதி செய்ய முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகையிட்டப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.
Sources
Facebook post by Rahul YaduVanshi, dated November 9, 2025
Google Maps