ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024

HomeFact CheckCISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் படம்.

Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பது கங்கனா ரனாவத்தின் கன்னமே அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னமாகும். பேகான் கொசுவத்தி மருந்துக்காக இவ்வாறு ஒரு  விளம்பரப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் அடித்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அந்த காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த காவலர் அடித்ததன் காரணமாக கங்கனாவின் முகத்தில் அக்காவலரின் கைத்தடம் பதிந்துள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

X Link | Archive Link

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

Archive Link

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டமா?

Fact Check/Verification

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

அத்தேடலில் கங்கனா ரனாவத் இச்சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவை ஆய்வு செய்கையில் கங்கனாவின் கன்னங்களில் எவ்வித தடமும் இடம்பெற்றிருக்கவில்லை.

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

இதனையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். அதில் வைரலாகும் படத்தில் இருப்பது கங்கனாவின் கன்னம் அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னம் என adsoftheworld.com  இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தின் வாயிலாக அறிய முடிந்தது.

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

பேகான் கொசுவத்தி மருந்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்படத்தில் அப்பெண்ணின் முகத்தை தவிர்த்து, காது மற்றும் கன்னத்தின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான பெண்ணின் படத்தையும், வைரலாகும் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல்

Also Read: மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றாரா மோடி?

Conclusion

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பது கங்கனா ரனாவத்தின் கன்னமே அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னமாகும்.

கொசுவத்தி மருந்தை விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட படத்தை எடிட் செய்து  இத்தகவல் பரப்பப்படுகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from Kangana Ranaut, Dated June 06, 2024
Post from adsoftheworld.com

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular