ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

HomeFact Checkகங்கனாவை அறைந்த CISF காவலர் ராகுல் காந்தியுடன் நிற்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

கங்கனாவை அறைந்த CISF காவலர் ராகுல் காந்தியுடன் நிற்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ராகுல் காந்தி மற்றும் குடும்பத்தினருடன் நிற்கும் CISF காவலர்

Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ திவ்யா மதர்னா ஆவார்.

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தியுடனும், சோனியாகாந்தியுடனும் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இவள்தான் குல்விந்தர் கவுர். இவள்தான் கங்கனா ராவத்தை கன்னத்தில் அறைந்தவள்.. இப்போது தெரிகிறதா யார் மூலகாரணம் என்று” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.

கங்கனாவை
Screenshot from x @Vinoth2214

X Link/Archived Link

Screenshot from x @LawAcademics

X Link/Archived Link

Screenshot from X @Deppaa2

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?

Fact Check/Verification

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 14, 2024 அன்று ராஜஸ்தான் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான திவ்யா மதர்னா, “Welcomed Mr. Rahul Gandhi and Mrs. Priyanka Gandhi who came along. Priyanka Gandhi Vadra Rahul Gandhi” என்று இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

திவ்யா மதர்னா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியாகாந்தியுடன் இருக்கும் இப்புகைப்படத்தை எடுத்தே தற்போது கங்கனா கன்னத்தில் அறைந்த CISF வீரர் குல்விந்தர் கவுர் என்று பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

மேலும், திவ்யா தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “BJP IT cells do not miss a moment to introduce its crooked mentality. Posting one of my photo with false facts in Rajasthan assembly from yesterday onwards in Rajasthan assembly nomination of respected Mrs. Sonia Gandhi ji, presenting me as CISF jawan Kulvindra Kaur to dust the image of respected Gandhi family Effort is there.” என்று குறிப்பிட்ட தனது புகைப்படம் போலியாக பரவி வருகிறது என்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

Conclusion

கங்கனாவை அறைந்த CISF காவலர் குல்விந்தர் கவுர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸாருடன் நிற்பதாகப் பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post From, Divya Mahipal Maderna, Dated Februry 14, 2024
Facebook Post From, Divya Mahipal Maderna, Dated June 14, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular