ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024

HomeFact Checkதோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?

தோனி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறினார்.

Fact: சிஎஸ்கே அணியின் எக்ஸ் பக்கத்தை 6 மில்லியன் பேர் பின்தொடர்ந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தை வைத்து இந்த தவறான தகவல் பரப்பப்படுகின்றது.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து, கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல்

X Link | Archive Link

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல்

Archive Link

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கேட்டதாக பரவும் புகைப்படத்தை ரிவர்ச் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்ததில் ‘IPL 2020: Chennai Super Kings completes 6M followers on Twitter’ என்று தலைப்பிட்டு அக்டோபர் 05, 2020 அன்று நியூஸ் 18 வெளியிட்ட செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் பக்கத்தை 6 மில்லியன் பேர் பின்தொடர்ந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல்

தொடர்ந்து தேடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்‘Nandri filled Thala Dharisanam as our Twitter fam becomes 6 Million Strong!’ என்று குறிப்பிட்டு இதே படத்தை அக்டோபர் 05, 2020 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்படம் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

 Also Read: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Conclusion

தோனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரளித்து கை சின்னத்தில் வாக்களிக்க கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Twitter post, CSK, October 5, 2020
News18 report, October 5, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular