Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வேற்று மொழி ஆக்கிரமிப்பில் திருவண்ணாமலை ஆலயம்
வைரலாகும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.
வேற்று மொழி ஆக்கிரமிப்பில் திருவண்ணாமலை ஆலயம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“தமிழ் எங்கடா..?தமிழர்களிடமிருந்து பறிபோகும் திருவண்ணாமலை!” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
வேற்று மொழி ஆக்கிரமிப்பில் திருவண்ணாமலை ஆலயம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் இயல்புக்கு மாறாக பல்வேறு பகுதிகளும் இடம்பெற்றிருந்தன. புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆலய கோபுரத்தில் உள்ள சிலைகள் எதுவுமே உருவமாக இடம்பெற்றிருக்கவில்லை.
பக்தர்கள் நடப்பது போன்று இடம்பெற்றுள்ள மனிதர்களின் உடல்பாகங்கள் சிதைவடைந்து காணப்படுவதை நம்மால் காண முடிந்தது. குறிப்பாக முகங்களே இடம்பெற்றிருக்கவில்லை.
மேலும், அப்புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த எழுத்துருக்களும் எந்த மொழியையும் சார்ந்திருக்கவில்லை. AI தொழில்நுட்பத்தால் பொதுவாக உருவாக்கப்படும் எழுத்துருக்களாகவே காணப்பட்டன.
எனவே, இந்த புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தை கண்டறியும் fakeimagedetector மூலமாக ஆய்வு செய்தபோது வைரல் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தது.
மேலும், sightengine இணையதளம் இப்புகைப்படம் 99% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தது.
திருவண்ணாமலை ஆலயத்தில் வேறு மொழி ஆக்கிரமிப்பு என்று இந்த AI புகைப்படம் போலியாக பரப்பப்படுகிறது என்பது இதன்மூலம் உறுதியாகியது.
Also Read: அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றாரா செம்மலை?
வேற்று மொழி ஆக்கிரமிப்பில் திருவண்ணாமலை ஆலயம் என்று பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Fake Image Detector
Sight Engine Tool
Self Analysis
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024
Vijayalakshmi Balasubramaniyan
October 23, 2023
Vijayalakshmi Balasubramaniyan
September 2, 2021