Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜக – கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறினார்.
இத்தகவல் தவறானதாகும். 2020 ஆம் ஆண்டில் வந்த நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
கடந்த 2020 சட்டமன்ற தேர்தலை அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. பல்வேறு முரண்பாடுகள் காரணமாக இக்கூட்டணி பிளவுப்பட்டு, நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக பொறுப்பேற்றப்பின் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அண்மையில் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தாரா ஜெயக்குமார்?
பாஜக – கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதேபோல் டிசம்பர் 19, 2020 என்ற தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் பதவிக்காலம் முடிவுற்று, அவருக்குப்பின் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றார். தற்போது அண்ணாமலையின் பதவிக்காலமும் முடிவுற்று நயினார் நாகேந்திரன் தலைவராக உள்ளார். இதன்படி பார்க்கையில் இந்த நியூஸ்கார்டு அண்மை நியூஸ்கார்டு அல்ல என உணர முடிந்தது. நியூஸ்கார்டில் உள்ள தேதியும் இதை உணர்த்தியது.
இதை உறுதி செய்ய வைரலாகும் நியூஸ்கார்டானது பாலிமர் நியூஸின் டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள டிசம்பர் 19, 2020 அன்று இந்த நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் ஊடகம் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தந்தி தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் எல்.முருகன் பேசிய வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது டிசம்பர் 19, 2020 அன்றே வெளியிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் நியூஸ் 18 தமிழ்நாடு, குமுதம் உள்ளிட்ட ஊடகங்களும் இதே தகவலை அச்சமயத்தில் செய்தியாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 2020 ஆம் ஆண்டில் எல்.முருகன் கூறிய கருத்தை அண்மையில் கூறியதாக திரித்து பரப்பப்படுவது தெளிவாகின்றது.
Also Read: வக்பு மசோதாவுக்கு எதிராக பிரியங்கா காந்தி போராடியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாஜக – கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் அண்மையில் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த நியூஸ்கார்டை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Polimer News, dated December 19, 2020
Report by Thanthi TV, dated December 19, 2020
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2025
Ramkumar Kaliamurthy
March 27, 2025
Ramkumar Kaliamurthy
March 20, 2024