Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இஸ்லாமியர் போன்று வேடமிட்டு உணவு உண்ணும் கமல்ஹாசன் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அதென்னடா குல்லா போட்டுத்தான் சாப்பிடணுமா?!
எங்க பிரசாதமே சாப்பிடக்காணோம்! விபூதி பூச வைக்கலாமா?!
எப்டிலாம் ஈனபொழப்பு பொழைக்க வேண்டியிருக்கு சில முதுகெலும்பற்றவர்க்கு! ” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
இஸ்லாமியர் போன்று வேடமிட்டு உணவு உண்ணும் கல்ஹாசன் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 𝘛𝘩𝘶𝘨 𝘏𝘢𝘢𝘴𝘢𝘯 𝘐𝘛 𝘞𝘪𝘯𝘨 என்கிற X பக்கத்தில் இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அல்லது வரையப்பட்ட புகைப்படம் போல இது தோற்றமளித்தது.
எனவே, இப்புகைப்படத்தை Hive Moderation tool-இல் ஆராய்ந்தபோது இப்புகைப்படம் 99.9% AI தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்டது என்று உறுதியானது.
தொடர்ந்து, இப்புகைப்படத்தை மற்றொரு AI தொழில்நுட்பம் கண்டறியும் Sight engine tool மூலமாக ஆராய்ந்தபோது அதிலும் குறிப்பிட்ட புகைப்படம் 99% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்று உறுதியானது.
எனவே, நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் போல தொப்பி அணிந்து உணவு உண்பதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்ட்டது என்பது தெளிவாகிறது.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
இஸ்லாமியர் போன்று வேடமிட்டு உணவு உண்ணும் கல்ஹாசன் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Analysis by Hive Moderation and Sight engine tool
X Post From, @MathankamalTUTY, Dated March 31, 2025
Ramkumar Kaliamurthy
May 13, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 23, 2024
Ramkumar Kaliamurthy
July 30, 2024