சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

HomeFact Checkபாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் எடிட் படம்!

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் எடிட் படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கினார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹ்ரித்திரிக் ரோஷன் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம்

X Link | Archive Link

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ச் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

அதில் “’Bheeshma’ star Nithin meets BJP chief JP Nadda” என்று தலைப்பிட்டு ஆகஸ்ட் 27, 2022 அன்று ANI நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா தெலுங்கு நடிகர் நிதினுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கும் படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம்
Screengrab from ANI News

இந்த படத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், வைரலாகும் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம்

தொடர்ந்து தேடுகையில் ஜே.பி.நட்டாவின் எக்ஸ் பக்கத்தில் நிதினுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் ஜே.பி.நட்டா நிதினை வரவேற்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

அதேபோல் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் இதுக்குறித்த படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம்
Screengrab from BJP’s official website

 Also Read: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Conclusion

பாஜகவுக்கு ஆதரவாக ஹ்ரித்திரிக் ரோஷன் களமிறங்கியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Twitter post, JP Nadda, August 27, 2022
ANI News Report, August 27, 2022
BJP’s official website Gallery photos

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular