செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkதர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் கோர விபத்து

Fact: வைரலாகும் வீடியோ மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விபத்து நிகழ்வின் காட்சியாகும்.

தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மீண்டும் தொப்பூர் கணவாயில் மிகப்பெரிய விபத்தாம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @mahesh74391485

X Link/Archived Link

Screenshot from x @rajagan82746122

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?

Fact Check/Verification

தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது இந்நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த ஆகஸ்டு 15 அன்று, இந்தூர்-மான்பூர் நெடுஞ்சாலையில் கார்கோன் மாவட்டத்தில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் மோதி விபத்துக்குள்ளாகியதில் 18 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலருக்கும் படுகாயம் ஏற்பட்டது என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Times of India உள்ளிட்ட செய்திகளில் இதுகுறித்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அவற்றை ஆராய்ந்தபோது தற்போது தர்மபுரி என்று வைரலாகும் வீடியோவும் அவையும் ஒரே விபத்து நிகழ்வு என்பதை உறுதி செய்ய முடிந்தது.

Instagram will load in the frontend.

குறிப்பிட்ட மத்திய பிரதேச மாநில விபத்து நிகழ்வே தமிழகத்தில் நடைபெற்றதாகப் பரவுகிறது.

 Also Read: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் கோர விபத்து என்று பரவும் வீடியோ உண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from, TOI, Dated August 17, 2024
Facebook Post By Zee Madhya Pradesh Chhattisgarh , Dated August 15, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular