செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 8, 2024

HomeFact Checkதேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

Fact: வைரலாகும் வீடியோ ஒரு சித்தரிப்பு வீடியோவாகும். வீடியோவில் இருப்பவர் இஸ்லாமியர் அல்ல, இந்து மதத்தை சார்ந்தவராவார். அவர் பெயர் ரித்திக் கட்டாரியாவாக

இஸ்லாமியர் ஒருவர் தனது கடையில் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை வைக்க மறுத்ததாக கூறி வீடியோ
ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

X Link | Archive Link

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

Facebook Link

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

Fact Check/Verification

இஸ்லாமியர் ஒருவர் தனது கடையில் இந்திய தேசியக் கொடியை வைக்க மறுத்ததாக பரவும் வீடியோவின் இறுதியில் ‘full video on yt @amarkataria’ என்று எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் @amarkataria எனும் பயனர் ஐடியை கொண்ட ரித்திக் கட்டாரியா எனும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஆகஸ்ட் 14, 2023 அன்று இப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

இவ்வீடியோவை முழுமையாக பார்க்கையில் இவ்வீடியோவானது சித்தரிக்கப்பட்ட வீடியோ என அறிய முடிந்தது.

இவ்வீடியோவில் கடையில் தேசியக் கொடியை வைக்க கூடாது என்று தடுத்த இஸ்லாமியர், தேசியக் கொடியை கீழே வைக்க கூடாது, அது உயரத்தில்தான் இருக்க வேண்டும், நான் உயரத்தில்தான் தேசியக் கொடியை வைத்துள்ளேன் என்று பேசுவதை காண முடிந்தது. இதை தொடர்ந்து அவரிடம் தகராறு செய்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரை கட்டி அணைப்பதையும், கடைசியில் அனைவரும் ஒன்றாக நின்று ஜெய் ஹிந்த் என்று கூறுவதையும் காண முடிந்தது.

தொடர்ந்து இப்பக்கத்தை ஆய்வு செய்கையில் இதுப்போன்று பல வீடியோக்கள் அந்த யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதை காண முடிந்தது. கூடவே அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அதில் பதிவிடப்பட்டிருந்தது.

அதில் ஒன்றாக பிறந்தநாள் நிகழ்வு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இஸ்லாமியராக நடித்திருந்த நபர் நெற்றியில் திரிசூல திலகத்துடன் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

இதன்படி பார்க்கையில் அந்நபர் இஸ்லாமியர் அல்ல, இந்து மதத்தவர் என தெளிவாகின்றது. தொடர்ந்து அந்நபர் குறித்து தேடுகையில் அவர் பெயர் ரித்திக் கட்டாரியா என அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியாக முடிந்தது.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

தொடர்ந்து ரித்திக் கட்டாரியாவின் இன்ஸ்டாகிடாம் பக்கத்தை ஆராய்கையில் வைரலாகும் வீடியோ பாகம் 02 என்று குறிப்பிட்டு அப்பக்கத்தில் ஆகஸ்ட் 15, 2024 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தேசியக் கொடியை கடையில் வைக்க மறுத்த இஸ்லாமியர்.

இதுத்தவிர்த்து இவ்வீடியோவின் மற்ற பாகங்களும் இப்பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ ஒரு புனைவு வீடியோ என்பதும், அதில் இஸ்லாமியராக நடித்தவர் உண்மையில் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதும் தெளிவாகின்றது.

 Also Read: கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Conclusion

இஸ்லாமியர் ஒருவர் தனது கடையில் இந்திய தேசியக் கொடியை வைக்க மறுத்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோ ஒரு சித்தரிப்பு வீடியோவாகும். வீடியோவில் இருப்பவர் இஸ்லாமியர் அல்ல, இந்து மதத்தை சார்ந்தவராவார். அவர் பெயர் ரித்திக் கட்டாரியாவாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube video from Ritik Kataria, Dated August 14, 2023
Ritik Kataria’s Instagram posts (Part 2, Part 3, Part 4 and Part 5), Dated August 15, 2024
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular