வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkதமாகா கலைக்கப்பட்டு ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்தார்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

தமாகா கலைக்கப்பட்டு ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்தார்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 1

Twitter Link | Archive Link

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 2

Facebook Link

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களுக்கென்ன கவலை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போர்முனை எனும் தனியார் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் பிரசுரமாகியது என்பதை அறிய முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் ஆசிரியர் விஜயசங்கரைத் தொடர்புக் கொண்டு பேசியதில், இத்தகவலை நாங்கள் பிரசுரித்தது உண்மையே. ஆனால் அது பொய்யான தகவல் என்பதை அறிந்தப்பின் அதை நீக்கியதோடு, அதற்கு மறுப்பும் தெரிவித்திருந்தோம். இதன்பின் தமாகா வழக்கறிஞர் வேண்டுக்கோளுக்கிணங்கி, அந்த மறுப்பு பதிவையும் நீக்கி விட்டோம்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து தேடுகையில் போர்முனை குழுமத்தை சார்ந்த மக்கள் குத்து சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பு பதிவை காண முடிந்தது.

மறுப்பு செய்தி
Sceen shot of Makkal kutthu’s post

Facebook Link

மேலும் தேடுகையில் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஜி கே வாசன் பேட்டி அளித்திருந்ததை காண முடிந்தது. இப்பேட்டில் நெறியாளர், நீங்கள் பாஜகவில் இணையவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர், இதுக்குறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்ப, இதற்கு ஜி.கே.வாசன், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நான் கூடியவரை வளர்க்க வேண்டும். அது உயர வேண்டும்.  அதன் அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையிலேயே என்னுடைய செயல்பாடுகள் தொடர்கின்றது” என்று பதிலளித்திருந்தார்.

Source: Youtube/Thuglag Digital

இதனடிப்படையில் பார்க்கையில் தமாகா கலைக்கப்பட்டு ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Conclusion

தமாகா கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக உறுதியாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False / Fabricated Content

Source

Youtube Vido Published by Thuglak Digital, on 21 May, 2022
Phone Conversation With Vijaya shankar, Editor, Pormurasu
Facebook Post From the Page, Makkal Kuthu, published on 22 May, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular