வியாழக்கிழமை, ஜூலை 18, 2024
வியாழக்கிழமை, ஜூலை 18, 2024

HomeFact Checkநிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நிதீஷ் குசும்பர், தன் பவரை காட்டுவதற்காக சும்மானாச்சியும் நடந்து வந்து மோடியை எழுந்து வணக்கம் சொல்ல வைத்துவிட்டு கெத்தா சிரித்தபடி திரும்பிப் போறார்.

Fact: வைரலாகும் இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே எடுக்கப்பட்டது ஆகும்.

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”நிதீஷ் குசும்பர், தன் பவரை காட்டுவதற்காக சும்மானாச்சியும் நடந்து வந்து மோடியை எழுந்து வணக்கம் சொல்ல வைத்துவிட்டு கெத்தா சிரித்தபடி திரும்பிப் போறார்..!” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @SJB56856832

X Link/Archived Link

Screenshot from X @samooganidhi

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

Fact check/Verification

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், கடந்த மார்ச் 30, 2024 அன்று ”Watch Video: Nitish Kumar Ignores Kharge While Greeting New Alliance Partners During Bharat Ratna Presentation Ceremony At Rashtrapati Bhavan” என்று Freepressjournal வெளியிட்டிருந்த செய்தி வீடியோ நமக்கு கிடைத்தது.

அதில், PTI வெளியிட்டிருந்த பாரத ரத்னா விருது வழங்கும் விழா வீடியோ நமக்குக் கிடைத்தது. “Bihar CM Nitish Kumar meets PM Modi during Bharat Ratna presentation ceremony at Rashtrapati Bhavan.” என்று வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் மோடி, நிதிஷ் குமாரை எழுந்து வணங்கும் வைரல் வீடியோ காட்சியும் இடம்பெற்றிருந்தது.

எனவே, தற்போது வைரலாகும் வீடியோ கடந்த மார்ச் மாதமே எடுக்கப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

Also Read: மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றாரா மோடி?

Conclusion

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று பரவும் வீடியோ கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post from @PTI_News, Dated March 30, 2024
Report from Freepressjournal, Dated March 30, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular