செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2024
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2024

HomeFact Checkவயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் பழைய படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் படம்!

Fact: இப்படம் 2019 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.

“#அரை_டவுசர்_சங்கி” என பரிகாசிக்கப்படும் நாங்கள்தான்.. எம் தேசத்தின் #இரண்டாவது_இராணுவம் .. காலில் செருப்புக்கூட இல்லாமல் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தன்னை அர்பனித்து கொள்ளும் மனித தெய்வங்கள் #RSS ஊழியர்கள்.. படம்:- #வயநாடு_நிலச்சரிவு மீட்பு பணியில் #RSS ஊழியர்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் படம்!

X Link | Archive Link

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் படம்!

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் 2021ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் RSS Swayamsevaks, Seva Bharati Volunteers in rescue works at Puthumala, Meppadi in Wayanad, Keralaஎன்று தலைப்பிட்டு @friendsofrss என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 11, 2019 அன்று  பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் படம்!

தொடர்ந்து தேடியதில் @Ethirajans என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்திலும் இதே படம் பயன்படுத்தப்பட்டு பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. இப்பதிவும் 2019 ஆண்டே பதிவிடப்பட்டிருந்தது.

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பரவும் படம்!

 Also Read: வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

Conclusion

வயநாடு நிலச்சரிவில் RSS ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X post from the user, @friendsofrss, Dated August 11, 2019
X post from the user, @Ethirajans, Dated August 11, 2019

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular