வெள்ளிக்கிழமை, ஜூலை 26, 2024
வெள்ளிக்கிழமை, ஜூலை 26, 2024

HomeFact Checkதமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினார் எஸ்.வி.சேகர்.

Fact: இத்தகவல் தவறானது என்று எஸ்.வி.சேகர் மறுத்துள்ளார். மத்தியில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றதற்காகவே பட்டாசு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தததை பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகர் எஸ்.வி.சேகர்” என்று குறிப்பிட்டு ஸ்பார்க் மீடியா எனும் இணைய ஊடகம் பதிவு ஒன்றை அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இப்பதிவுடன் எஸ்.வி.சேகர் சிறுவர் ஒருவருடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

இப்பதிவை ஒரு இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம் பேருக்கும் மேல் இதுவரை பார்த்துள்ளனர். 5300 பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

இதுபோல் பலரும் இதே தகவலுடன் இவ்வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல்

Archive Link

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?

Fact Check/Verification

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய எஸ்.வி.சேகரின் சமூக ஊடகப் பக்கங்களை முன்னதாக ஆராய்ந்தோம்.

இதில் எந்த ஒரு தகவலையும் குறிப்பிடாமல் வைரலாகும் வீடியோவை மட்டும் எஸ்.வி.சேகர் அவரது எக்ஸ் பக்கத்தில் நேற்று (07/06/2024) பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகரை தொடர்புக்கொண்டு அவ்வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருப்பதை கொண்டாடுவதற்காக பட்டாசு வெடித்ததாக தெரிவித்தார்.  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் அவர் தெளிவு செய்தார்.

Also Read: மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றாரா மோடி?

Conclusion

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். எஸ்.வி.சேகரே இத்தகவலை மறுத்துள்ளார். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from S.Ve.Sekhar, Dated June 07, 2024
Phone Conversation with S.Ve.Sekhar

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular