சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024
சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024

HomeFact Checkகிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில்
Fact: வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குற்றாலத்தில் அமைந்துள்ள திராவிட பாணியில் கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆசிரம தேவாலயமாகும்.

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”Christians occupied old temple. Kalasam replaced by a Cross and converted into a Church at Adhiyaman, Ramanathapuram, Tamil Nadu.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from x @kavita_tewari

X Link/Archived Link

Screenshot from X @kumarrao15

X Link/Archived Link

Screenshot from x @KINGS_4_EVER

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

Fact Check/Verification

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் மூலமாக ஆராய்ந்தபோது கடந்த 2020ஆம் ஆண்டு முதலே இப்புகைப்படம், “கிறிஸ்துவ ஆலயமாக மாற்றப்பட்ட இந்துக் கோயில்” என்பதாகப் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.

ஆனால், கடந்த அக்டோபர் 9, 2013 அன்று பதிவிடப்பட்ட Rajans’ Ministry Updates என்கிற சமூக வலைத்தளத்தின் பதிவில், “Church Modeled in Indian style” என்று இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

National Missionary Society of India) NMSI’s Christukula Ashram @ Courtallam என்கிற பெயரில் இவரது புகைப்படத்தொகுப்பு நமக்கு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது குற்றாலம் NMSI ஆசிரமத்தின் புகைப்படம் என்பது உறுதியாகியது.

மேலும், Hindu Samayam என்கிற சமூக வலைத்தளப்பக்கத்திலும் இது குறித்த விளக்கம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, NMSI ஆசிரம நிர்வாகியான ஹென்றி ரிச்சர்டை நியூஸ்செக்கர் தரப்பில் தொடர்பு கொண்டு பேசியபோது, குறிப்பிட்ட தேவாலயம் திராவிடக்கட்டிடக்கலையை உதாரணமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார். மேலும், “எங்களுடைய நிறுவனர்கள் திராவிடக்கட்டிடக்கலையின் மீது கொண்ட ஈர்ப்பால் எங்கெல்லாம் தேவாலயங்களை அமைத்தார்களோ அவற்றை கோயில்கள் பாணியில் அமைத்தனர். இந்துக்கோயில் வடிவமைப்பில் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் இது. மேலும், சில மாதங்களுக்கு முன்பாக உள்ளூர் காவல்துறையும் இது திராவிடக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட தேவாலயம் என்பதை உறுதி செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

Conclusion

கிறிஸ்துவ தேவாலயமாக மாற்றப்பட்ட இந்துக்கோயில் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from, Hindu Samayam, Dated June 27, 2020
NMSI website
Conversation with Henry Richard, in-charge of NMSI ashram


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular