செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

HomeFact Checkராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றார் டிரம்ப்.

Fact: டிரம்ப் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவை அவர் பதிவிடவில்லை. டிரம்ப் பெயரில் இயங்கும் போலி/பகடி எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

புதிய அமெரிக்க குடியரசுத்தலைவராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் உலகத்தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் அவரது எக்ஸ் பக்கத்தின் வாயிலாக டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இப்பதிவுக்கு, “ஜார்க் சோரஸின் இந்திய கைக்கூலி ராகுல்காந்திக்கு நன்றி. தாய்நாட்டை வலுவிழக்க செய்ய ஜார்ஜ் சோரஸ் போன்ற இந்தியாவுக்கு எதிரானவர்களுடன் இணைந்து சொந்த நாட்டுக்கு துரோகம் செய்பவர்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்காது. சரியானவர்களுடன் நட்பு பழகுங்கள் ராகுல்.”  என்று டிரம்ப் பதிலளித்ததாக எக்ஸ் தள ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றார் டிரம்ப்.

X Link | Archive Link

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றார் டிரம்ப்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் எடிட் படம்!

Fact Check/Verification

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றும், ஹங்கேரிய-அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸின் கைக்கூலி என்றும் டிரம்ப் பதிவிட்டதாக எக்ஸ் தள ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்பதிவு குறித்து தேடினோம்.

இத்தேடலில் அப்பதிவானது டிரம்பால் பதிவிடப்படவில்லை; அவர் பெயரில் இயங்கும் போலிக்கணக்கில் பதிவிடப்பட்டது என அறிய முடிந்தது. இப்பதிவு பதிவிடப்பட்ட எக்ஸ் பக்க பயனர் கணக்கிலேயேParody (பகடி/போலி)என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றார் டிரம்ப்.

இந்த பகடி எக்ஸ் பக்கத்தை அஷ்வினி ஸ்ரீவஸ்தவா என்பவர் நிர்வகித்து வருகின்றார் என்பதை இப்பக்கத்தின் முகப்பில் இருந்த சுயவிவரக் குறிப்பின் வழியாக அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அஷ்வினி ஸ்ரீவஸ்தவாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ராஜீவ்காந்தி குறித்த பதிவை இவர்தான் பதிவிட்டார் என்பதை உறுதி செய்து பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றார் டிரம்ப்.

Also Read: இளம் பெண் போன்ற ரோபோ சீனத் தெருக்களில் சுற்றித்திரிவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

ராகுல் காந்தியை தேசத்துரோகி என்று அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். டிரம்ப் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவை அவர் பதிவிடவில்லை. டிரம்ப் பெயரில் போலி/பகடி எக்ஸ் கணக்கு நடத்தும் அஷ்வினி ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
X Post from The Parody Account, @thedonaldtrumph, Dated November 06, 2024
X Post from Ashwini Shrivastava, Dated November 06, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular