ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 8, 2024

HomeFact Checkதிருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா?

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திருப்பதி தரிசனக்கட்டணம் மற்றும் லட்டு விலை குறைப்பு

Fact: வைரலாகும் செய்தி போலியாக பரவி வருகிறது. இதனை TTD உறுதி செய்துள்ளது.

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“*திருமலை தரிசன கட்டணம் ரூ300 /-* *200 /- ரூபாயாக குறைப்பு* *50 /- ரூபாயாக இருந்த லட்டு தற்போது* *25 /- ரூபாயாக குறைப்பு* *ஆந்திர பிரதேச அரசாங்கம்* இங்கேயும் இருக்கே ஒரு களவாணி திருட்டுக் குடும்பக் கட்சி மூதேவி. கோயிலையெல்லாம் இடிச்சித் தள்ளிக்கிட்டு. “ என்று இந்த செய்தி பரவி வருகிறது.

திருப்பதி
Screenshot from x @LawAcademics

X Link/Archived Link

Screenshot from X @Senthil91764466

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Fact Check/Verification

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

உண்மையில் திருப்பதியில் கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதா என்று அதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் ஆய்வு செய்தோம். அப்போது, அவர்களுடைய TTD News பக்கத்தில் “NO CHANGE IN RS. 300(SED)TICKETS AND LADDU RATES- TTD URGES DEVOTEES NOT TO BELIEVE FAKE NEWS ON SOCIAL MEDIA PLATFORMS” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த விளக்கம் பதிவிடப்பட்டுள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போன்று திருப்பதி தரிசனக்கட்டணம் குறைப்பு மற்றும் லட்டு பிரசாத விலை குறைப்பு என்கிற செய்திகள் தவறானவை என்பது நமக்கு உறுதியாகிறது.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Conclusion

திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from TTD News, Dated June 22, 2024
X Post from TTD, Dated June 22, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular