சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024
சனிக்கிழமை, அக்டோபர் 12, 2024

HomeFact Checkராகுல் காந்தியை குனிந்து வணங்கினாரா உத்தவ் தாக்கரே?

ராகுல் காந்தியை குனிந்து வணங்கினாரா உத்தவ் தாக்கரே?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரவும் படம்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட படமாகும். இருவேறு தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெட்டி ஒன்றாக இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“காங்கிரசை நடுங்க வைத்த மராத்திய புலி பாலாசாகேப் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயின் பரிதாப நிலை! Spineless , Shameless, useless leader born for Tiger Balasaheb Thackeray” என்று குறிப்பிட்டு புகைப்படம்
ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரவும் படம்.

X Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

Fact Check/Verification

உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரப்பப்படும் படத்தை கூர்மையாக கவனிக்கையில் இருவேறு படங்களை ஒன்றாக இணைத்து அப்படம் உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை கவனிக்க முடிந்தது.

ஆகவே முன்னதாக ராகுல் காந்தி பூச்செண்டுடன் இருக்கும் படம் குறித்து தேடினோம். இத்தேடலில் ராகுல்காந்தி பூச்செண்டை பிடித்தவாறு உத்தவ் தாக்கரேவுடன் இருக்கும் படம் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் உத்தவ் தாக்கரே வைரலாகும் படத்திலிருப்பதுபோல் குனிந்து நிற்கவில்லை. நிமிர்ந்தே நின்றிந்தார்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரவும் படம்.

தொடர்ந்து தேடுகையில் சிவசேனா கட்சியின் எக்ஸ் பக்கத்திலும் இந்த சந்திப்பு குறித்த படங்கள் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் ராகுல் காந்தி பூச்செண்டுடன் இருக்கும் படம் இடம்பெற்றிருந்தது.

இதுத்தவிர்த்து உத்தவ் தாக்கரே ராகுலை குனிந்து வணங்கியதாக எந்த ஒரு படமும் காங்கிரஸ் சமூக ஊடகப் பக்கங்களிலோ அல்லது சிவசேனா சமூக ஊடகப் பக்கங்களிலோ இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து உத்தவ் தாக்கரே குனிந்து இருக்கும் படம் குறித்து தேடினோம். இத்தேடலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தாரை உத்தவ் தாக்கரேவும் அவரது மகனும் சந்தித்ததாக கூறி டைம்ஸ் நவ்வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அப்படங்களில் ஒன்றாக உத்தவ் தாக்கரே அரவிந்த் கெஜ்ரிவாலின் பெறோரை குனிந்து வணங்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரவும் படம்.

தொடர்ந்து தேடுகையில் சிவசேனா கட்சியின் எக்ஸ் பக்கத்திலும் இந்த சந்திப்பு குறித்த படங்கள் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றில் உத்தவ் தாக்கரே அரவிந்த் கெஜ்ரிவாலின் பெறோரை குனிந்து வணங்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இருவேறு தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெட்டி ஒன்றாக இணைத்து ராகுல்காந்தியை உத்தவ் தாக்கரே குனிந்து வணங்கியதாக பரவும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படங்களையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

 Also Read: தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியை குனிந்து வணங்கியதாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட படமாகும். இருவேறு தருணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெட்டி ஒன்றாக இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Instagram By INC, Dated August 07, 2024
X Post By Shiv Sena, Dated August 07, 2024
Instagram By Times Now, Dated August 08, 2024
X Post By Shiv Sena, Dated August 08, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular