செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2021
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2021
HomeFact Checksகொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா?

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாக வெளியான செய்தி போலியா?

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி வழங்கியதாகப் பரவிய செய்தி போலியானது என்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் கூடிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா
Source: Twitter

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காருக்கு செலுத்தக் கோரிய நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதனை கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மீண்டும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்த வழக்கு விசாரணையில், கடந்த 27 ஆம் தேதியன்று அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது நீதிமன்றம்.

குறிப்பிட்ட விசாரணையில் நடிகர் விஜய் தரப்பில், கொரோனா நிவாரண நிதிக்கு ஏற்கனவே 25 லட்ச ரூபாய் கடந்த ஆண்டு வழங்கியுள்ளதால், 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே நடிகர் விஜய் தரப்பில் ரூ 1.30 கோடி கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது பொய் என்பதாக வைரல் போஸ்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாகக் கூறியது பொய் என்பதாகப் பரவுகின்ற தகவல் குறித்து ஆராய்ந்தோம்.

முதலில், கடந்த ஆண்டு விஜய் தரப்பில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்ச ரூபாய் குறித்து ஆராய்ந்ததில், 2020 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதி பட்டியலில் `சங்கீதா திருமண மண்டபம்’ பெயரில் ரூ.50 லட்சம் இடம்பெற்றுள்ளது. அவருடைய பெயரில் நேரடியாக இந்தத் தொகை நிவாரண நிதியாக அளிக்கப்படவில்லை.

கொரோனா

மேலும், ரூ.1 கோடியே 30 லட்சத்தை நிவாரண நிதியாக அறிவித்திருந்த நடிகர் விஜய் அதனை மொத்தமாக தமிழக அரசு நிவாரண நிதிக்கு அளிக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம், பெஃப்சிக்கு 25 லட்சம், கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயும் அளித்துள்ளார் என்பது தெளிவாகியது.

கொரோனா

Twitter Link

இதுகுறித்து, நடிகர் விஜயின் நெருக்கமான தரப்பில் இருந்து உறுதிப்படுத்திக்கொண்டோம்.

மேலும், நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில், ஏற்கனவே நிவாரண நிதிக்கு கடந்த ஆண்டு 25 லட்ச ரூபாய் வழங்கியதாக கூறிய செய்தியில், அது பிரதமர் நிவாரண நிதி குறித்து சொல்லியதா அல்லது தமிழக அரசுக்கு வழங்கிய நிவாரண நிதி குறித்து சொல்லப்பட்டதா என்பது குறித்த விரிவான விவரங்கள் இல்லை. எனினும், அவர் கடந்த ஆண்டு ரூ 1.30 கோடியை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Conclusion:

கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியளித்ததாகக் கூறியது பொய் என்பதாகப் பரவுகின்ற தகவல் ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

CMPRF: https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/Schemes

Dinamani: https://www.dinamani.com/tamilnadu/2021/jul/28/court-relief-for-tamil-actor-vijay-in-rolls-royce-case-3668427.html

Thanthi tv: https://www.youtube.com/watch?v=CTTuLDKqvFQ

Puthiyathalaimurai: https://www.youtube.com/watch?v=3esdZNumigc

Oneindia: https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-interim-ban-on-rs-1-lakh-penalty-on-actor-vijay-428198.html

News 18: https://tamil.news18.com/amp/news/entertainment/cinema-madras-high-court-two-judge-bench-ordered-interim-stay-on-judgement-against-actor-vijay-skd-515871.html

Facebook: https://www.facebook.com/watch/live/?v=389080156070430&ref=watch_permalink

Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/698551-reluctant-to-pay-rs-1-lakh-as-relief-fund-vijay-s-reply-to-a-judge.html

Nakheeran: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-vijays-luxury-car-case-postponed-without-mentioning-date-after

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular