புதன்கிழமை, மே 12, 2021
புதன்கிழமை, மே 12, 2021
HomeFact Checksஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதா?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதா?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்கு பாஜக வெற்றி பெற்றதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்
Source: Twitter

Fact Check/ Verification:

தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 150 வார்டுகளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதியன்று வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தல் அளவிற்கு பெரும் பரபரப்பைப் பெற்ற இத்தேர்தல் களத்தில் தெலுங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதியும், மத்தியில் ஆளும் பாஜகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.

அவ்வாக்குப்பதிவின் எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வெற்றி பெற்றுவிட்டதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Source: Twitter
Source: Twitter
Source: Twitter

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளின் உண்மை நிலவரம் என்ன? என்பதைப் பற்றி வாசகர்களுக்கு விளக்க நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மையும் பின்னணியும்:

ஹைதராபாத் தேர்தலில் பாஜக அசத்தல் வெற்றி என்று புகைப்படம் ஒன்றை மட்டும் பதிவிட்டிருந்த அதிபன் இணையதளத்தில் சென்று பார்த்த பொழுது, செய்தி வேறாக இருந்தது.

கடந்த தேர்தல் முடிவுகளை இந்த வருடத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு, பாஜக கடந்த முறையை விட தற்போது அதிக இடங்கள் வெற்றி பெற்றுள்ளது என்பதையே தலைப்பில் ‘அசத்தல் வெற்றி’ என்று கவனம் ஈர்க்கும் வகையில் அவ்விணையதளம் குறிப்பிட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

Source: Twitter

Link: https://www.athibantv.com/2020/12/blog-post_350.html

மேலும், சமூக வலைத்தளங்களில் பலரும் பகரும் வகையில் பாஜக இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்த வரையில், ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி 55 இடங்களிலும், பாஜக 48 இடங்களிலும், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 150 இடங்களில் பெரும்பான்மைக்கு 76 இடங்களுக்கு மேல் தேவை என்கிற நிலையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டிஆர்எஸ் கட்சி மற்றும் பாஜக இரண்டு கட்சிளுமே பெரும்பான்மையைப் பெறவில்லை.

முதலிடத்தில் இருந்தாலும் கூட டி.எஸ்.ஆர் கட்சி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்கிற நிலைமை. தேர்தல் முடிவுகள் குறித்த புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளோம்.

Source: Twitter

மேலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தையும் சில இணைய ஊடகப்பக்கங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.

https://tsec.gov.in/AbstractResultReportGhmc.se

https://indianexpress.com/article/cities/hyderabad/hyderabad-ghmc-election-results-2020-live-updates-bjp-trs-aimim-congress-7088090/

https://tamil.oneindia.com/news/hyderabad/ghmc-poll-results-bjp-makes-kcr-dependent-on-owaisi-in-hyderabad-404996.html

எனவே, பாஜக கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் வென்றிருந்த 4 இடங்களை விட, இம்முறை 40 இடங்கள் அதிகமாக வெற்றி பெற்றிருப்பதையே சில ஊடகங்கள் வெற்றி என்று பகிர்ந்துள்ளன. அதையே முழுச்செய்தியையும் அறியாமல் சமூக வலைத்தளத்தினர் பகிர்ந்து வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகிறது.

Conclusion:

எனவே, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்று பரவும் சமூக வலைத்தளத் தகவல் தவறானது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

Result: Misleading

Our Sources:

TSEC: https://tsec.gov.in/AbstractResultReportGhmc.se

Indian Express: https://indianexpress.com/article/cities/hyderabad/hyderabad-ghmc-election-results-2020-live-updates-bjp-trs-aimim-congress-7088090/

One India Tamil: https://tamil.oneindia.com/news/hyderabad/ghmc-poll-results-bjp-makes-kcr-dependent-on-owaisi-in-hyderabad-404996.html

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular