வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkசர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை மத்திய அரசின் திட்டமா ?

சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை மத்திய அரசின் திட்டமா ?

உரிமைக்கோரல்:

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.15000/- உதவித் தொகை, சர்தார்  பட்டேல் கல்வி உதவித் தொகை -2020.

சரிபார்ப்பு :

மாணவர்களுக்கு உதவித் தொகைப்  பல நிறுவனங்களால் அனைத்துக் கல்வி ஆண்டிலும் வழங்கப்பட்டு வருகிறது, இதைத்  தொடர்ந்து  பா.ஜ.க கிள்ளியூர் ஒன்றியத் தலைவர்  அச்சடித்தப்  போஸ்டர் ஒன்றில் மத்திய அரசு சார்பாக மாணவர்களுக்கு உதவித் தொகை தருவதாகப் பரவியச் செய்தி சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது .இதன் உண்மைத் தன்மையை  நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம் .

https://www.facebook.com/photo.php?fbid=946568012445447&set=gm.3395254633835423&type=3

உண்மைச் சோதனை :

தமிழகத்தில் கிள்ளியூர் ஒன்றிய பாஜகத் தலைவர் சி.எஸ்.செந்தில்குமார் என்பவர் சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை என்றத் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்குவதாகப் பிரதமர் மோடி மற்றும் பாஜகத்  தலைவர்களின் புகைப்படத்துடன் தன் புகைப்படத்தையும் இணைத்துப்  போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மாணவர்கள் தங்களின் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகுமாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ஒருவரால் வெளியிடப்பட்ட இப்பதிவால் கல்லூரி மாணவர்கள் கணினி மையங்களை அணுகத் தொடங்கி உள்ளனர்,

“சர்தார் பட்டேல் கல்வி உதவித்தொகை” திட்டம் மத்திய அரசின் திட்டமே அல்ல. இது  “BUDDY4STUDY ” என்ற ஒரு NGO அமைப்பு “sardar patel scholarship for students purusing graduation “என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது .அதற்கான சில ஆவணங்களையும் கேட்டுள்ளனர்.இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு தன்னார்வ NGO அமைப்பே ஆகும்.

https://twitter.com/Buddy4Study/status/1247079093633454081

சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் என்ஜிஓ அமைப்பு மூலம் இந்த உதவித்தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் 2020-ம் ஆண்டிற்கான Buddy4study  கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகத்  தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. உதவித்தொகை பெறுவதற்கான ஆவணங்கள், செயல்முறை உள்ளிட்டவை அதன் இணையதளத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. 

https://www.buddy4study.com/page/sardar-patel-scholarship-for-students-pursuing-graduation

முடிவுரை

 எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் BUDDY4STUDY என்றத் தன்னார்வ அமைப்பு மாணவர்களுக்கு வழங்கிய உதவித்தொகையை மத்திய அரசு வழங்குவது போன்ற தோற்றத்தில் பிரதமரின் புகைப்படத்துடன் பாஜகவைச் சேர்ந்தவர் பதிவிட்டு உள்ளார் . இது மத்திய அரசி திட்டமே அல்ல. இது மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்கிறது.

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook

Result: FALSE 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular