சமூக வலைத்தளங்களில் ஜோதிடர் ஒருவர் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீதியில் நடந்ததால் அவனை தலைகீழாக கட்டி வைத்து அடித்தார் என் தாத்தா என்று அந்த ஜோதிடர் பேசியுள்ளார்.
மேலும் வேறு இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன் தாத்தாவின் காலைப் பிடித்து விடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் பேசிய இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, ஜோதிடர் பேசிய கூற்றுக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
Archive Link: https://archive.vn/Rb3jB

Archive Link:https://archive.vn/IL9Ut

Archive Link:https://archive.vn/3uUkI
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இவ்வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ வெறும் 53 விநாடிகள் மட்டுமே உள்ளது. மேலும் அவர் பேசிக் கொண்டு இருக்கும்போது பாதியிலேயே அவ்வீடியோ முடிகின்றது.
வைரலாகும் இந்த வீடியோவின் முழுப்பகுதியைக் கண்டால் மட்டுமே அந்த ஜோதிடர் எதற்காக இதைப் பேசியுள்ளார் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும். ஆகவேதான் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதியை நாம் இணையத்தில் தேடினோம்.
நம் தேடலில் VIJAYAN G எனும் யூடியூப் பக்கத்தில் “திருமணத்திற்கு குரு பலனும், பொருத்தமும் அவசியமா?” எனும் தலைப்பில் நமக்கு தேவையான வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மொத்தம் 56 நிமிடம் 30 நொடிகள் உள்ள இவ்வீடியோவில் அவர் பல கருத்துகளை பேசியுள்ளார். இதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கருத்தானது ஏறக்குறைய 17:40 க்கு வருகின்றது.
இக்கருத்தைத் தொடர்ந்து அவர் என்ன பேசியுள்ளார் என்பதைக் கேட்டோம். அதில் அவர் தன் தாத்தா செய்தது பாவம் என்றும், அந்த பாவத்தினால் அவர் அகால மரணமடைந்தார் என்றும், அவரின் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.
வாசகர்களின் புரிதலுக்காக அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:
மேலுள்ள வீடியோவை முழுமையாக கண்டபின், ஜோதிடர் கூறிய கருத்தில் பாதியை மட்டும் வெட்டி, அவர் மாற்று சமூகத்தை இழிவாகப் பேசினார் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு தெளிவாகின்றது.
Conclusion
ஜோதிடர் ஒருவர் மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்து தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் உங்களுக்கு விள்க்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misplaced Context
Our Sources
Twitter Profile: https://twitter.com/DON_LOPUS/status/1364463127824269316
Facebook Profile: https://www.facebook.com/100008010542172/videos/2958987861044870
Facebook Profile: https://www.facebook.com/jothi.rajan.7543653/videos/185565139990917
YouTube: https://www.youtube.com/watch?v=c5KqfZwKgkw&feature=youtu.be
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)