வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkகாங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியா?

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

கங்கிரஸ் குறித்து நியூஸ் 7-ல் வந்தச் செய்தி.
நியூஸ் 7-ல் வந்தச் செய்தி.

 Fact Check/Verification

கடந்த வெள்ளிக்கிழமை (11/09/2020) அன்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதன்பின் இச்செயற்குழுக் கூட்டத்தில்,  வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் தரவேண்டும் என்று தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியது.

இச்செய்தியானது இந்து தமிழ், புதிய தலைமுறை உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

புதிய தலைமுறையில் வந்தச் செய்தி.
கங்கிரஸ் குறித்து இந்து தமிழில் வந்தச் செய்தி.
இந்து தமிழில் வந்தச் செய்தி.
சேனல் விஷனில் வந்தச் செய்தி.

ஊடகங்களில் வெளிவந்த இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

ஊடகங்களில் வெளியான இச்செய்திக் குறித்து ஆராய்ந்தபோது, இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வீரபாண்டியன் அவர்கள் இச்செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுக்குறித்த மறுப்புச் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் மறுப்புச் செய்தி.
வீரபாண்டியன் அவர்களின் மறுப்புச் செய்தி.

மேலும் இச்செய்தி நியூஸ்18, சமயம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளது.

கங்கிரஸ் குறித்து நியூஸ் 18-ல் வந்தச் செய்தி.
நியூஸ் 18-ல் வந்தச் செய்தி.
கங்கிரஸ் குறித்து சமயம் தமிழில் வந்தச் செய்தி.
சமயம் தமிழில் வந்தச் செய்தி.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கேட்டதாக ஊடகங்களில் வெளிவந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.

Result: False

Our Sources

Pudhiya Thalaimurai: https://www.youtube.com/watch?v=h5lOjPRbUSc

News7 : https://twitter.com/news7tamil/status/1304414417333809153

Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/577734-deputy-chief-minister.html

Channel Vision: https://twitter.com/iChannelVision/status/1304654557310382080

News 18: https://tamil.news18.com/news/tamil-nadu/did-chennai-west-congress-demand-deputy-cm-riz-344603.html

Samayam: https://tamil.samayam.com/latest-news/state-news/tn-congress-denies-its-resolution-which-seeks-deputy-cm-in-dmk-alliance/articleshow/78064803.cms

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular